இதையே செய்ய முடில... நீங்களா வேலுமணி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வீர்கள்? அறப்போர் இயக்கம் கேள்வி!
Arappor iyakkam admk sp velumani cut out tvk cm vijay
தமிழக முதல்வர் விஜய்க்கு அறப்போர் இயக்கம் விடுத்துள்ள கோரிக்கையில், "முதல்வர் விஜய் அவர்களே, உங்கள் கட்சி உறுப்பினர்களின் சுயவிளம்பர வெறிக்கு இவ்வாறு சாலைகளையும் நடைபாதைகளையும் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். சொல்லில் அல்ல செயலில் காண்பிப்போம் என்று சொன்னீர்களே.. இது தான் அந்த செயலா?
மக்கள் நலனில் அக்கறை இல்லாத சமூக விரோதிகள் தானே இது போல மக்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில், சட்ட விரோதமாக சாலைகளிலும் நடைபாதைகளிலும் பேனர் வைப்பார்கள். அப்போ உங்க கட்சியினர் சமூக விரோதிகளா?
அறிவே இல்லாதவர்கள் தானே, வண்டிகள் செல்லும் சாலையிலும், மக்கள் நடந்து செல்லும் நடைபாதைகளையும் மறித்து பேனர் வைப்பார்கள். அப்போ உங்க கட்சியினர் அறிவு கெட்டவர்களா?
சாலைகளில் உங்கள் கட்சியினர் பேனர் வைப்பதை கூட உங்களால் தடுக்க முடியவில்லையே... நீங்கள் எப்படி முன்னாள் ADMK அமைச்சர் வேலுமணி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போகிறீர்கள் என்று மக்கள் கேட்பது உங்கள் காதில் விழுகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
English Summary
Arappor iyakkam admk sp velumani cut out tvk cm vijay