அதிமுக, திமுக ஆட்சியில் நடந்த ஊழல் லிஸ்ட்... ஆதாரத்துடன் அமைச்சரை சந்தித்த அறப்போர் இயக்கம்!
arapor iyakkam tvk minister meet admk dmk govt scam
அறப்போர் இயக்கம் இன்றைய தினம் மின்சாரம், ஊழல் தடுப்பு மற்றும் சட்ட அமைச்சர் R . நிர்மல் குமார் அவர்களை சந்தித்து அறப்போர் இயக்கம் இதுவரை லஞ்ச ஒழிப்பு துறையில் கொடுத்துள்ள 40 புகார்களின் விவரங்களை அளித்துள்ளது.
ஏற்கனவே இதை தபாலில் 11/06/2026 அன்று அமைச்சருக்கு அனுப்பி உள்ளோம். இன்று நேரில் சந்தித்து புகார்கள் குறித்து விவரித்தோம். இதில் கடந்த காலங்களில் 9 புகார்கள் மீது மட்டுமே FIR பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்கி உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக திமுக ஆட்சிகளில் நடந்த நிலக்கரி மற்றும் தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கிய ஊழல், ரேஷன் ஊழல், கே பி பார்க் கட்டுமான ஊழல், பத்திரப்பதிவு துறை ஊழல்கள், அரசு நிலம் அபகரிப்பு ஊழல்கள், உயர்கல்வித்துறை ஊழல்கள், உள்ளாட்சி துறை ஊழல்கள், மாநில நெடுஞ்சாலை துறை ஊழல்கள் போன்ற 30 க்கும் மேற்பட்ட ஊழல்கள் மீது உடனடியாக FIR பதிவு செய்து துரிதமாக விசாரணை செய்ய கோரி உள்ளோம். ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவது முக்கியம். இதுவே பொறுப்புடைமையையும் மற்றவர்கள் ஊழல் செய்யாமல் தடுப்பதற்கும், ஊழலை ஒழிக்கவும் உதவும்.
அமைச்சர் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து உள்ளதாக அறப்போர் இயக்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
arapor iyakkam tvk minister meet admk dmk govt scam