அண்ணாமலை,டிடிவி தினகரன் ரகசிய சந்திப்பு...! கூட்டணி அரசியலில் அதிரடி திருப்பமா...? - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது அரசியல் களத்தை சூடேற்றும் வகையில் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்.அப்போது அவர் தெரிவித்ததாவது,"தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக டிடிவி தினகரன் அறிவித்த சமயம் நான் சென்னைக்கு வெளியே இருந்தேன்.

ஆனால் பின்னர் அவருடன் பேசினோம். திமுக கூட்டணியை வீழ்த்த எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைப் பற்றி தினகரனின் பார்வையையும் கேள்விப்பட்டேன். அரசியல் சூழ்நிலைகள் வெப்பமடையும் போது சில மனஸ்தாபங்கள் மாறக்கூடும். இன்னும் காலம் உள்ளது… காத்திருப்போம்.

அரசியலில் கூட்டணி என்பது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் ஒன்று. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தையும் விரைவில் சந்திக்க திட்டமிட்டுள்ளேன். சுற்றுப்பயணம் முடிந்ததும் அவர் வீட்டிற்கு செல்வேன்,” என்றார் அண்ணாமலை.அவர் மேலும்,“முதல்வர் மு.க. ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து நடிகர் விஜய் தெரிவித்த கருத்துகளை வரவேற்கிறேன்.

தமிழ்நாட்டில் யாரேனும் குரல் கொடுத்தாலே உடனே ‘பாஜகவின் பி-டீம்’ என்கிறார்கள். விஜய்க்கு வாய் இருக்கிறது, அவர் பேசுவார். சபாநாயகர் அப்பாவும் பாஜக-போபியாவில் இருந்து வெளியே வர வேண்டும். ரஜினியுடன் நான் மாதம் ஒருமுறை சந்திப்பேன்.

அதிலும் ஆன்மீகம் குறித்த விவாதங்கள் தான் நடைபெறும்,” எனவும் தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, பாதுகாப்பு வாகனங்களை தவிர்த்து, மாற்றுக் காரில் அடையாளம் தெரியாமல் அடையாறு சென்ற அண்ணாமலை, அங்கு டிடிவி தினகரனை ரகசியமாக சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 1 மணி நேரம் நீண்ட இந்த சந்திப்பில், கூட்டணியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியதாகவும், அதற்கு பதிலளித்த தினகரன், “பழனிசாமியை கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஒருபோதும் ஏற்க முடியாது” என்ற தனது உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதாகவும் அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai TTV Dinakarans secret meeting dramatic twist coalition politics


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->