ஜி.எஸ்.டி. குறைப்பு நேரில் சோதனை! கோவையில் இனிப்பு கடையில் வானதி சீனிவாசன் ஆய்வு...!
GST reduction person Vanathi Srinivasan inspects sweet shop Coimbatore
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்ததால், அத்தியாவசிய பொருட்கள் முதல் டிவி, ஏசி வரை விலைகள் குறைந்தன. இதனால் மக்களும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே,கோவையில் உள்ள இனிப்பு மற்றும் டீக்கடைகளுக்கு சென்ற எம்.எல்.ஏ. 'வானதி சீனிவாசன்', விலைகள் குறைந்ததா? என நேரில் ஆய்வு செய்தார்.

அங்கு ஊழியர்கள், “முன்பு ரூ.420 இருந்த மைசூர் பாகு கிலோவிற்கு ரூ.380, ரூ.640 இருந்த சிப்ஸ் இப்போது ரூ.540க்கு கிடைக்கிறது” என்று தெரிவித்தனர்.
மேலும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியுடன் “2 பொருட்கள் வாங்கியவர் இப்போது 3 பொருட்கள் எடுத்து செல்கின்றனர்” என்றனர்.இதுகுறித்து எம்.எல்.ஏ. வானதி, “மக்களின் சுமையை குறைக்க பிரதமர் மோடி எடுத்த முடிவுதான் இது.
விலை குறைப்பு அனைவருக்கும் சென்றடைய வேண்டும்” என தெரிவித்தார்.
English Summary
GST reduction person Vanathi Srinivasan inspects sweet shop Coimbatore