மதுரை || ஐடிஐ மாணவர்கள் மீது தாக்குதல் - விடுதி பாதுகாவலர் இடைநீக்கம்.!!
hostel wardern suspend for iti students attack issue in madurai
மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் அருகே செக்கானூரணியில் அரசு ஐ.டி.ஐ. மாணவர் விடுதியில், மாணவர்கள் சிலர் சக மாணவனை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக தகவல் வெளியானது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் மூன்று மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தற்போது அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அந்த விடுதியின் பாதுகாவலர் பாலமுருகன் என்பவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே ராகிங் நடந்த விடுதியில் மாவட்ட கல்வி அதிகாரி ஜவஹர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
hostel wardern suspend for iti students attack issue in madurai