உத்தரப்பிரதேசத்தில் சுமார் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்; வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 31-ஆம் தேதி வெளியீடு..! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேசத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 31-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே இருக்கும் பட்டியலில் இருந்து 2.89 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 04-ஆம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்தது. பின்னர், அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, டிசம்பர்  26 வரை இந்தப் பணியை மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் 31-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

இந்த வாக்காளர் பட்டியல் திருத்த பணி தொடங்குவதற்கு முன்னர், வாக்காளர் பட்டியலில், 15,44,00,000 பேர் இடம்பெற்று இருந்தனர். இந்தப் பணி முடிந்த நிலையில், 12,55,56,000 வாக்காளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். மொத்தம், 2,88,75,000 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

அதாவது, 18.70 சதவீத வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு நீக்கப்பட்ட வாக்காளர்களில் சுமார் ஒரு கோடி பேர் எங்கு இருக்கின்றனர் என கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. 

அத்துடன், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் எனத் தெரிவித்துள்ள தேர்தல் கமிஷன் அதிகாரிகள், நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் பட்டியலில் இடம்பெற விரும்பினால் விண்ணப்பம் 06 ஐ பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளனர்.

மேலும், நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெரும்பாலும் லக்னோ, காசியாபாத், பிரயாக்ராஜ் மற்றும் கான்பூர் நகரங்களைச் சேர்ந்தவர்கள் எனத் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Approximately 28 900 000 voters removed from the electoral roll in Uttar Pradesh


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->