நாதகவினர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி; ஈ.வெ.ரா. பெயரை அகற்றி மீண்டும் வள்ளல் தகடூர் அதியமான் பெயரை எழுதிய நெடுஞ்சாலைத்துறை..!
The Highways Department has inscribed the name of the philanthropist Thagadur Athiyaman
சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் மொத்தம் 20 கொண்டை ஊசி வளைவுகள் (hairpin bends) உள்ளன. மிகவும் செங்குத்தான வளைவுகளை கொண்ட ஒவ்வொரு வளைவுக்கும் பண்டைய கால மன்னர்களின் புகழைப் போற்றும் வகையில், அவர்களது பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், 08 வது கொண்டை ஊசி வளைவிற்கு தகடூர் அதியமான் வளைவு என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது.
கடந்த கோடை விழாவின் போது சாலையை புதுப்பித்தனர். அப்போதுஇந்த 08 வது கொண்டை ஊசி வளைவிற்கு ஈவெரா பெயரை நெடுஞ்சாலை துறையினர் வைத்ததனர். இதற்கு நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, இந்த வலையில், ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
அப்போது அவர்கள் ஈவெரா என்ற பெயரை அழித்து விட்டு, அதன் மீது, கருப்பு பெயின்ட் அடித்து, 'தகடூர் அதியமான்' வளைவு என, பிளக்ஸ் ஒட்டினர். பின்னர் போராட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்ற நாம் தமிழர் கட்சியினர் 13 பேர் மீது ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அத்துடன், கடந்த 02 நாட்களுக்கு முன் திராவிடர் விடுதலை கழகத்தை சார்ந்த 100 பேர் எட்டாவது கொண்டை ஊசி வளைவில் ஒன்று திரண்டனர். பின்னர் நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியிருந்த பிளக்ஸ் இன் மீது ஈ.வெ.ரா., வளைவு என்ற பிளக்ஸை ஒட்டியதோடு, நாம் தமிழர் கட்சியினர் மீது நடவடிக்கை கோரி போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இன்று இரவு நெடுஞ்சாலை துறையினர் திராவிடர் விடுதலை கழகத்தினர் ஒட்டிய ஈ.வெ.ரா., வளைவு என்ற பிளக்ஸ் பேனரை அகற்றிவிட்டு அந்த வளைவில் மீண்டும் தகடூர் அதியமான் வளைவு என்று எழுதியுள்ளதோடு, அந்த வளைவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
The Highways Department has inscribed the name of the philanthropist Thagadur Athiyaman