அதிக சத்தத்துடன் பட்டு கேட்ட பக்கத்து வீட்டுக்காரர்; ஆத்திரத்தில் துப்பாக்கி சூடு நடத்திய பெண்..!
A woman fired a gun at her neighbor for playing music at a very high volume
இரவு நேரத்தில் அதிக சத்தத்துடன், ஸ்பீக்கரில் பாட்டு கேட்ட பக்கத்து வீட்டுக்காரரை எச்சரிப்பதற்காக பெண் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் ரஸ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, இரவு நேரத்தில் அதிக சத்தத்துடன் பாட்டு கேக்க வேண்டாம் என பக்கத்து வீட்டுக்காரரை அந்த பெண் பல முறை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், அந்த நபர் அதனை பொருட்படுத்தாமல், தொடர்ந்தும், அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டு வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் மது போதையில் இருந்தபோது தனது வீட்டில் இருந்த ஏகே 47 ரக துப்பாக்கியால் பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டு ஜன்னலை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. ஆனால், இந்த துப்பாக்கி சூட்டில் ஏதும் விபரிதம் ஏற்பட்டதா உள்பட விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
English Summary
A woman fired a gun at her neighbor for playing music at a very high volume