கோவையில் மாஸ் காட்டும் அண்ணாமலை! 'மக்களே முகத்திரையைக் கிழிப்பார்கள்'...! - செந்தில் பாலாஜிக்குச் சவால்
Annamalai shows mass Coimbatore People tear off face mask Challenge Senthil Balaji
தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கடும் அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது.
தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் மற்றும் த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் நான்கு முனைப் போட்டி தீவிரமாக உருவெடுத்துள்ளது.வெற்றி இலக்கை நோக்கி ஒவ்வொரு கட்சியும் முழு வேகத்தில் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இருசக்கர வாகனத்தில் வீதி தோறும் சுற்றி மக்களுடன் நேரடியாக கலந்துரையாடி வாக்குகளை திரட்டினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கருத்துக் கணிப்புகள் அனைத்தும் நமக்கு சாதகமாக இருந்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மையான ஆதரவு அலை முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை.
மாநிலம் முழுவதும் எங்களுக்கு வலுவான ஆதரவு பெருகி வருகிறது. மே 4ஆம் தேதி ஒவ்வொரு தொகுதியிலும் எங்கள் வேட்பாளர்கள் பெறும் வெற்றி வித்தியாசம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்” என தெரிவித்தார்.மேலும், “செந்தில்பாலாஜி தனது செயல்களில் தவறு இருந்ததை எப்போதும் ஒப்புக்கொள்ள மாட்டார்.
வெளிப்படையாக காந்திய சிந்தனை பேசினாலும், அதன் பின்னணி வேறு. தேர்தல் நாளில் மக்களே அவரின் உண்மையான முகத்தை வெளிக்கொணர்வார்கள். கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசனின் வெற்றி உறுதி செய்யப்பட்டதே” என அவர் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Annamalai shows mass Coimbatore People tear off face mask Challenge Senthil Balaji