அரசாணை இல்லாத ஆன்லைன் சட்டம் - ஆளுநரை சந்தித்த அண்ணாமலை பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன? என்று, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை நேரில் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு புகார்களை அளித்துள்ளார். குறிப்பாக சென்னை வந்த பிரதமர் மோடிக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று அண்ணாமலை புகார் அளித்துள்ளார்.

ஆளுநர் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தெரிவித்தாவது, "செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவின் போது, சென்னை வந்த பிரதமர் மோடிக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை.

பிரதமர் வருகையின் போது, மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகளில் குறைபாடு இருந்துள்ளது. பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய பாதுகாப்பு படையினர் மாநில அரசிடம் தகவல் தெரிவித்துள்ளனர். பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன?

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது. ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்திற்கு அரசாணை கூட பிறப்பிக்கப்படவில்லை" என்று அண்ணாமலை தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai press meet after RN Ravi meet 291122


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->