போலீஸ் வேனில் வைத்து போலீசாருக்கே பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த கொலை குற்றவாளிகள்: அதிர்ச்சி வீடியோ வெளியிட்டு அண்ணாமலை கண்டனம்..!
Annamalai condemns shocking video of murder convicts publicly threatening to kill police in police van
நீதிமன்றத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் , காவல் நீட்டிக்கப்பட்ட பிறகு ரவுடி கும்பல் ஒன்றை வேனில் போலீசார் அழைத்து சென்றனர். அப்போது அவர்கள் போலீசாரை மிரட்டல் விடுக்கும் வீடியோவை வெளியிட்டு,''திமுக ஆட்சியில் இந்த ரவுடிகள் தான் ஆட்சி செய்கிறார்கள்,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கொலை, கொலை முயற்சி, வழிப்பறி என 16 வழக்குகள் தொடர்புள்ள சென்னை அண்ணா நகரை சேர்ந்த பிரபல ரவுடி ராபர்ட். கடந்த பிப்ரவரி மாதம் ராபர்ட்டை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக 06 பேர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். மேலும் சிலரை போலீசார் கைது செய்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்ட கொலையாளிகளின் காவலை நீட்டிக்க, சென்னை எழும்பூர் நீதிமன்றத்திற்கு, பலத்த பாதுகாப்புடன் வேனில் போலீசார் அழைத்து வந்தனர். காவல் நீட்டிக்கப்பட்ட பிறகு மீண்டும் போலீஸ் வேனில் சிறைக்கு புறப்பட்டனர்.
அப்போது, வெளியே இருந்த ஒருவன் கஞ்சா பொட்டலத்தை, பந்து போல் உருட்டி போலீஸ் வேனுக்குள் இருந்த ரவுடிகளிடம் வீசியதால், இதை பார்த்த போலீசார் அந்த நபரை தாக்கியபோது ஆத்திரம் அடைந்த கொலை வழக்கு கைதிகள், தாக்கிய போலீசை அடிக்க பாய்ந்ததோடு, பகிரங்கமாக கொலை மிரட்டலும் விடுத்தனர்.
அத்துடன், ‛உன் மூஞ்ச பார்த்து வச்சிருக்கோம் விடமாட்டோம். நாங்களாம் கொலைக்கு மேல கொலை பண்றவங்க'ணு சொல்லி போலீஸ் வேனுக்குள் ரகளை செய்தனர். ஆனால், அப்போது போலீசாரால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீடியோவை வெளியிட்ட அண்ணாமலை, வெளியிட்டு தமிழக அரசை கண்டித்துள்ளார். திமுக ஆட்சியில் இந்த ரவுடிகள் தான் ஆட்சி செய்கிறார்கள். போலீசில் வேனில் கொண்டு செல்லும் போது, போலீசாரையே ரவுடிகள் மிரட்டி அடிக்கப் பாய்வது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீது எந்த பயமும் இல்லை என்பதை தான் வீடியோ காட்டுகிறது. உண்மையிலேயே இந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில் பாஜக அண்ணாமலை அவர்கள் கூறி இருப்பதாவது: ''பெரம்பலூர் கொளத்தூரில் உள்ள சுந்தரமூர்த்தி அய்யனார் கோவிலில் இருந்து ஒரு உண்டியலை திமுக நிர்வாகி துணைவேந்தன் தூக்கியபோது வீடியோவில் சிக்கியுள்ளார்.
முரண்பாடாக, இந்த உண்டியலை மனிதவளத் துறை நிறுவவில்லை, மாறாக துணைவேந்தன் தானே நிறுவினார். அதிகாரிகள் இறுதியாக அதை சீல் வைக்க நடவடிக்கை எடுத்தபோது, அவர் மிரட்டல் விடுத்து உண்டியலையும் பக்தர்களின் காணிக்கைகளையும் எடுத்துச் சென்றார்.
திமுக ஆட்சியின் கீழ், கோவில்கள் கூட அரசியல் கொள்ளையிலிருந்து தப்பவில்லை. இதை நாங்கள் சுட்டிக்காட்டுவது இது முதல் முறை அல்ல.'' இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
English Summary
Annamalai condemns shocking video of murder convicts publicly threatening to kill police in police van