அண்ணாமலை மீண்டும் டெல்லி பயணம் - ஜே.பி.நட்டாவுடன் முக்கிய ஆலோசனை! 
                                    
                                    
                                   Annamalai BJP JP Nadda 
 
                                 
                               
                                
                                      
                                            அண்ணாமலை பாஜக டெல்லி பயணம் ஜேபி நட்டா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் ஏப்ரல் 7ஆம் தேதி டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
பாஜக தலைமை, தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களுக்கான தலைமை பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் அண்ணாமலையுடன் அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் இணைந்து கலந்துரையாட உள்ளார்.
அவருடைய இந்த பயணத்திற்குப் பின்னணி, தமிழக பாஜக தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படுமா? அல்லது அண்ணாமலைவே தொடருவாரா? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்குமா என்பது கவனிக்கப்பட வேண்டிய அம்சமாக உள்ளது.
மேலும், தமிழக பாஜக தலைவர் நியமன அறிவிப்பு ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். அவரை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) நேரில் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் முக்கியத்துவம் பெறும் தகவலாகும்.