அண்ணாவின் கனவு உயிருடன் உள்ளது! மறுமலர்ச்சி திமுக யாராலும் அசையாது...! - துரை வைகோ பரபரப்பு பேச்சு!
anna dream alive revivalist DMK not shaken anyone Durai Vaikos sensational speech
திருச்சி மாவட்டம் சிறுகனூரில் ம.தி.மு.க. மாநாட்டில் துரை வைகோ உரையாடியதாவது,"நமது தலைவர்மீது உங்களுடைய காதல், இயக்கத்தின்மீது உங்களுடைய விசுவாசம் – இது உலகின் எங்கும் காண முடியாத அபூர்வமான பந்தம். என் தந்தை எனக்கு கொடுத்த மிகப்பெரிய செல்வம், மறுமலர்ச்சி சொந்தங்களின் அன்புதான்.
இதை கோடிக்கணக்கான பணத்தால் கூட வாங்க முடியாது; இது விலைமதிப்பற்ற சொத்து.நம் தலைவர் மீது கொண்டுள்ள காதலும், அன்பும், அர்ப்பணிப்பும் தான் இந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியது.

கடந்த 32 ஆண்டுகளாக சிலர் எவ்வளவோ முயன்றும், இந்த இயக்கத்தை பிளவுபடுத்தவோ அழித்துவிடவோ முடியவில்லை; இனியும் முடியாது.இமயமலை கூட அசையலாம்… ஆனால், மறுமலர்ச்சி சொந்தங்களின் இதயத்தில் வேரூன்றிய இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது.
இந்நிலையில், மகாகவி பாரதியின் கவிதை எனக்கு நினைவுக்கு வருகிறது:
“பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? வீழ்ந்தது நீதான்; நான் அல்ல. நீங்களும் அல்ல.
”பேரறிஞர் அண்ணா கனவு கண்ட தமிழகம் - வலிமையுள்ள தமிழகம், வளமிக்க தமிழகம் - அந்த கனவு நனவாகும் வரை நாமும் வீழ்வதில்லை; மறுமலர்ச்சி திமுக எப்போதும் வீழ்வதில்லை" என்று தெரிவித்தார்.இது தற்போது அரசியல் வட்டாரங்களில் பெருமளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.
English Summary
anna dream alive revivalist DMK not shaken anyone Durai Vaikos sensational speech