74 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இதுவே முதல்முறை; திருவாடானை தொகுதியில் இருந்து அமைச்சர்.!
An Minister from the Thiruvadanai constituency a first in 74 years of political history
திருவாடானை தொகுதியின் 74 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தவெக எம்எல்ஏ ராஜீவ் அமைச்சராக பதவியேற்றுள்ளார். இந்த தொகுதியில் வெற்றி பெற்ற யாரும் இதுவரை அமைச்சராக பதவி வகிக்கவில்லை.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 04 தொகுதிகளில் பரமக்குடி (தனி), ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 03 தொகுதிகளில் திமுகவும், திருவாடானை தொகுதியில் தவெகவும் வெற்றி பெற்றன.
இந்த திருவாடானை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கருமாணிக்கத்தைவிட தவெக வேட்பாளர் வி.கே.ராஜீவ் 2,513 வாக்குகள் கூடுதலாக பெற்று எம்எல்ஏ தேர்வானார். மருத்துவரான ராஜீவ் சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சராக நேற்று பொறுப்பேற்றுள்ளார்.
திருவாடானை தொகுதியில் 1952 முதல் 2021 வரை 16 முறை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் சுதந்திரா கட்சியினர் தலா 02 முறையும், காங்கிரஸ் 06 முறையும், திமுக மற்றும் தமாகா தலா 02 முறையும், அதிமுக 02 முறையும் (2016-இல் அதிமுக கூட்டணி முக்குலத்தோர் புலிப்படை) வெற்றி பெற்றன.
கடந்த 2011-ஐல் நடந்த தேர்தலில் திமுக சார்பில் சுப.தங்கவேலனும், 2016-இல் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாசும், 2021 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கருமாணிக்கமும் வெற்றி பெற்றனர்.
தமிழகத்தில் காங்கிரஸ், திமுக, அதிமுக ஆட்சியில் இருந்தபோது, இத்தொகுதியில் இக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றபோதும், இதுவரை யாரும் அமைச்சராக பதவி வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
An Minister from the Thiruvadanai constituency a first in 74 years of political history