எனக்கு பின்னால் அண்ணாமலையா? டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி!
AMMK TTV Dhinakaran BJP ADMk Annamalai
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இடம், உங்களுக்கு பின்னால் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இருக்கிறாரா என்ற கேள்விக்கு விளக்கம் அளித்தார்.
அதில், “நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது, மோடி பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான். ஆனால் எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்தவர். எங்களைச் சந்திக்க கூட தயங்கியவர் கூட்டணிக்கு எப்படிக் வருவார்?
அவர் அகங்காரத்தில் செயல்படுகிறார். நயினார் நாகேந்திரன், ஓ.பன்னீர்செல்வத்துடன் பேசத் தயார் என்று கூறுவது வெறும் வார்த்தை மட்டுமே. உண்மையில் அவர் பழனிசாமி மீதுதான் நம்பிக்கை வைத்துள்ளார். அதுவே நாங்கள் கூட்டணியிலிருந்து விலகக் காரணமாகியது. பழனிசாமியைத் தவிர வேறு எவருக்கும் எங்களிடம் விரோதம் இல்லை.
தேனி தொகுதியை எனக்காக விட்டுக்கொடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் நான் பேசுவது இயல்பானதே. விரைவில் செங்கோட்டையனையும் சந்திக்க உள்ளேன். சிலர் எதிர்பார்க்காத கூட்டணிகள் உருவாகும். எனக்குப் பின்னால் அண்ணாமலை இருப்பது போலவும், செங்கோட்டையனுக்குப் பின்னால் பாஜக இருப்பது போலவும் பரப்பப்படுவது உண்மையல்ல. இது ஊடகங்களின் கற்பனைக்கதை.
தவெகவுடன் இணைப்பு ஏற்படும் என்ற செய்திகளும் அடிப்படையற்றவை. எது நடந்தாலும் வெளிப்படையாகச் சொல்வோம். நடிகர் விஜயின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொள்ளத் தேவையில்லை. அவர் தனது வழியில் செல்வார்” என தினகரன் கூறினார்.
English Summary
AMMK TTV Dhinakaran BJP ADMk Annamalai