அமைச்சர் சிவி சண்முகத்துக்கு, திமுக பாணியில், பதிலடி கொடுத்த தினகரன்!  - Seithipunal
Seithipunal


அமமுக  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களை நிதானமின்றி பழித்து பேசும் அமைச்சர் திரு.C.V.சண்முகம் அவர்களுக்கு எனது கண்டனத்தை தெரிவிக்கிறேன் என முன்னாள் அமைச்சரும், அமமுக துணைப்பொதுச்செயலாளருமான செந்தமிழன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "நிதானத்தை இழந்தாலும், தானும் தன் குடும்பமும் அடிமைக் கூட்டம்தான் என்பதை தெளிவாக ஒப்புக்கொண்ட மந்தி(ரி) சண்முகத்துக்கு சில வார்த்தைகள்,  பழங்காலத்தில் அடிமையை அமர வைத்து தலை வாழை இலை போட்டு யாரும் சாப்பாடு போட மாட்டார்கள். கஞ்சியோ கூழோ, நிற்க வைத்துதான் ஊற்றுவார்கள். அதைத்தான் எதையோ ஊற்றியதாக, அதிகார போதை தெளியாமல் உளறிக்கொட்டியிருக்கிறார். 

(அதிகார) போதை தெளிந்தால் மந்திரி மந்தியாகத்தான் தெருவில் திரிய வேண்டும் என்பதை நிதானத்தில் இருக்கும்போது சண்முகம் புரிந்துகொள்ள வேண்டும். குலம், குடும்பம், சமூகம் எதற்குமே அர்த்தம் விளங்காத மந்தி(ரி) சண்முகம் இனியும் தேவையில்லாமல் எங்கள் பொதுச் செயலாளரை சீண்டிப்பார்த்தால் அந்த (அதிகார)போதைக்கு தக்க பதிலடி தரப்படும் என்று எச்சரிக்கிறேன்" என G.செந்தமிழன் தெரிவித்துள்ளார். 

பாமக தலைவர்களுக்கு பதிலறிக்கைகள் கொடுக்க, திமுக, அக்கட்சியில் உள்ள வன்னியர்களை பயன்படுத்துவது போல, அதே பாணியில் தினகரனும் அவர் கட்சியில் உள்ள வன்னியரான செந்தமிழனை வைத்து, வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த அமைச்சரான சிவி சண்முகத்துக்கு பதில் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMMK Replies to Minister CV Shanmugam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal