அம்பேத்கரின் 132வது பிறந்த நாள் - அமமுக வெளியிட்ட அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


இந்திய அரசியல் சாசன சிற்பி டாக்டர். B.R.அம்பேத்கரின் 132வது பிறந்த நாள் - 14.04.2022 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வெளியான அந்த அறிவிப்பில், 

"இந்திய அரசியல் சாசன சிற்பி, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி, சட்டமேதை டாக்டர். B.R.அம்பேத்கர் அவர்களின் 132வது பிறந்த நாள் வரும் 14.04.2022, வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படவிருக்கிறது.

இதையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் அன்றைய தினம் காலை 10 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவிருக்கிறார்கள்.

இந்நிகழ்வில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகம் மற்றும் அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்"

இவ்வாறு அன்ஹா அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ammk announce for BRA birth day


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->