திடீரென டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என். ரவி! அமித்ஷா உடன் சந்திப்பு?!
Amit shah Delhi TN Governors RN Ravi
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களைக் குறித்து ஒப்புதல் வழங்காமல் இருந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தது.
மேலும், கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி முதல், நிலுவையில் இருந்த மசோதாக்களை ஒப்புதல் அளித்ததாகவே கருதப்படும் எனவும், மசோதாவை ஒரு மாதத்துக்குள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதனைத் தொடர்ந்து, மாநில ஆளுநர்களின் கடமைகள் குறித்தும் குடியரசுத் தலைவரின் பொறுப்புகளையும் பற்றியும் நீதிமன்றம் தெளிவாக வழிகாட்டியது.
இந்த நிலையில், இன்று டெல்லி சென்றுள்ள ஆளுநர் இந்த தீர்ப்பு குறித்து மேல்மட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாகவும், அங்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டத்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் ஆலோசகர்களுடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவிருக்கிறார் என்பரும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Amit shah Delhi TN Governors RN Ravi