மகன், மருமகன், மாமியார்... தேர்தல் களத்தில் லாட்டரி மார்ட்டின் குடும்பத்தினர் ஹாட்ரிக் வெற்றி!
All Three from Lottery Martins Family Secure Victory in 2026 Elections
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் லாட்டரி அதிபர் மார்ட்டின் குடும்பத்திற்கு ஒரு மிகப்பெரிய அரசியல் அங்கீகாரத்தை வழங்கியுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களிலும் இக்குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வெவ்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிட்டு, தங்களின் வெற்றியைப் பதிவு செய்து ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளனர்.
புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதியில் லட்சிய ஜனநாயகக் கட்சியின் (LCK) தலைவரான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் போட்டியிட்டார். அவர் தனது தொகுதி மக்களிடையே பெரும் செல்வாக்கைப் பெற்று, சுமார் 10,205 வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
அதேபோல் தமிழகத்தில், இவரது மருமகன் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் களம் கண்டார். இன்று மாலை 5:30 மணி நிலவரப்படி, அவர் சுமார் 17,276 வாக்குகள் வித்தியாசத்தில் தனது எதிராளிகளை வீழ்த்தி வெற்றியை வசப்படுத்தியுள்ளார்.
மேலும், மார்ட்டின் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், மார்ட்டின் மனைவியுமான லீமா ரோஸ் மார்ட்டின், இம்முறை அதிமுக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டுத் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார். வெவ்வேறு கட்சிகள் மற்றும் வெவ்வேறு மாநிலங்களில் இக்குடும்பத்தினர் பெற்றுள்ள இந்த ஒருங்கிணைந்த வெற்றி, இந்தத் தேர்தலின் மிகவும் குறிப்பிடத்தக்கச் செய்திகளில் ஒன்றாக மாறியுள்ளது.
English Summary
All Three from Lottery Martins Family Secure Victory in 2026 Elections