நாளை பிரதமர் மோடி தலைமையில், 'ஆப்ரேஷன் சிந்தூர்' தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம்...!
All party meeting chaired by Prime Minister Modi tomorrow regarding Operation Sindhur
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இன்று அதிகாலை 'ஆப்ரேஷன் சிந்தூர்' நடத்தப்பட்டது. இது சுமார் 25 நிமிடங்கள் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது.

இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.இந்நிலையில் இந்திய ராணுவம் தரப்பில், 'ஆப்ரேஷன் சிந்தூர்' தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக மத்திய அமைச்சரவை கூடி ஆலோசனை நடைபெற்றது. இதைக் குறித்து, ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து உரையாடவுள்ளார்.
இந்நிலையில், பரபரப்பான சூழ்நிலையில், நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதில் நாளை நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் ''ஆப்ரேஷன் சிந்தூர்'' தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்கவுள்ளார்.
English Summary
All party meeting chaired by Prime Minister Modi tomorrow regarding Operation Sindhur