மத்தியில் பாஜக ஆட்சி விரைவில் கவிழ்கிறது! மகிழ்ச்சியான நாட்களுக்கு ரெடியாகுங்க - அகிலேஷ் யாதவ் பரபரப்பு பேச்சு!
Akhilesh Yadav Say about BJP Central Govt
கொல்கத்தாவின் தர்மதலா நகரில் தியாகிகள் தின பேரணி நேற்று நடைபெற்றது. இதில் மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரசு கட்சியின் நிறுவனத்தலைவருமான மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர்.
இந்த பேரிணியில் மம்தா பானர்ஜி பேசுகையில், அரசியலில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு வழங்குவதாக தேர்தலுக்கு முன்பு பலரும் அறிவித்திருந்தனர். ஆனால், அவர்களால் இதனை செய்ய முடியவில்லை.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி பெண் எம்.பி.க்களுக்கு 38 சதவீத ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளது. இந்த வகையில், பெண் எம்.பி.க்களுக்கு 38 சதவீத ஒதுக்கீட்டை உறுதி செய்த ஒரே கட்சி திரிணமூல் காங்கிரஸ் கட்சிதான்" என்றார்.
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், ‘‘இந்த பாஜகவின் மத்திய அரசு நீடிக்காது. இதனை நான் ஏற்கனவே மக்களவையில் தெரிவித்திருந்தேன். தற்போது மீண்டும் சொல்கிறேன் இந்த மத்திய அரசு நீடிக்காது, நிச்சயம் கவிழும். மகிழ்ச்சியான நாட்களை நாம் மீண்டும் பார்க்க போகிறோம்.

மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் இன்னும் சில நாட்கள்தான் அதிகாரத்தில் இருப்பார்கள். விரைவில் இந்த ஆட்சி கவிழும். மேற்குவங்க மாநில மக்கள், பாஜகவுடன் போராடி அதை தோல்வியடைச் செய்துள்ளீர்கள். இதனை போன்று தான் உத்தர பிரதேச மாநிலத்திலும் நடந்துள்ளது என்றார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி பேசுகையில், "பாரதிய ஜனதா கட்சியினர் அவர்களது வெற்றிக்காக பணபலத்தையும், மத்திய விசாரணை அமைப்புகளையும் நம்பி உள்ளனர். மேற்குவங்கத்தில் ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடந்ததாக சட்டர்ஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். ஆனால் நீட் தேர்வில் நடந்த முறைகேட்டுக்காக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கைது செய்யாததற்கு காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பி பேசினார்.
English Summary
Akhilesh Yadav Say about BJP Central Govt