"அமைச்சராகும் கனவில் விஜய்யைச் சுற்றும் முன்னாள் அமைச்சர்கள்!": ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்!
AIADMKs RB Udhayakumar Slams CM Vijay Over Appointing AIADMK Turncoats and Neglecting TVK Loyalists
ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில் மாற்றுக் கட்சியினருக்கு உயர் பதவிகளை வழங்கி, தவெகவின் உண்மைத் தொண்டர்களையும் ரசிகர்களையும் முதலமைச்சர் விஜய் புறக்கணிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களிடம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மாற்றுக் கட்சியினருக்கு முன்னுரிமை: தவெகவைச் செல்வாக்குமிக்க கட்சியாகக் காட்டிக் கொள்ள, செங்கோட்டையன், நிர்மல் குமார் போன்ற மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்குக் கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியப் பதவிகள் வழங்கப்படுவதாகவும், பல ஆண்டுகளாக விஜய்க்காக உழைத்த ரசிகர் மன்றத் தொண்டர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
வழங்கப்பட்ட முக்கியப் பதவிகள்: அதிமுகவிலிருந்து வந்த கு.ப.கிருஷ்ணனுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர், புஷ்பவனம் குப்புசாமிக்கு இயல் இசை நாடக மன்றத் தலைவர், சிங்கை ராமச்சந்திரனுக்கு ஸ்டார்ட் அப் தமிழ்நாடு தலைவர், ரஞ்சித் குமாருக்கு அமைச்சர் பதவி மற்றும் ஜேசிடி பிரபாகருக்கு சபாநாயகர் பதவி எனப் பதவிகள் வாரி வழங்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
அமைச்சராகக் காத்திருப்போர் பட்டியல்: சத்யபாமா, சி. விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆர். விஜயபாஸ்கர், வைகைச் செல்வன் உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர் பதவியைப் பெறும் கனவோடு முதலமைச்சர் விஜய்யைச் சுற்றி வருவதாகக் கிண்டல் செய்தார்.
அரசுக்கு எதிரான போராட்டங்கள்: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்திற்கு எதிராக மீனவர்கள், மின்வெட்டு, குடிநீர் தட்டுப்பாடு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் என மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வரும் வேளையில், பிற கட்சிகளை அழிக்கும் போக்கைக் கைவிட்டு திட்டங்களைச் செயல்படுத்திப் பணியாற்ற விஜய் முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.
இடைத்தேர்தல் முடிவுகள் மீது நம்பிக்கை: பிற கட்சிகளை உருகுலைக்கும் வேலைகளில் ஈடுபடாமல் ஜனநாயகத்தைக் காப்பாற்றவும், தேவையற்ற இடைத்தேர்தல்களைத் தடுக்கவும் பொதுமக்கள் இந்த இடைத்தேர்தலில் தவெகவுக்குத் தகுந்த தீர்ப்பை வழங்கியிருப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
English Summary
AIADMKs RB Udhayakumar Slams CM Vijay Over Appointing AIADMK Turncoats and Neglecting TVK Loyalists