விவசாயிகள் பிரச்சனை: அதிமுக வெளிநடப்பு - திமுக அரசு மீது எடப்பாடியார் கடும் தாக்கு!
AIADMK Walkout EPS Slams Govt Over Broiler Farmers Wages and Laptop Politics
சட்டசபையில் விவசாயிகள் மற்றும் கறிக்கோழி வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்துப் பேச அனுமதி மறுக்கப்பட்டதால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடியார் முன்வைத்த முக்கியக் குற்றச்சாட்டுகள்:
கறிக்கோழி விவசாயிகள் பாதிப்பு: சுமார் 5 லட்சம் கறிக்கோழி வளர்ப்பாளர்கள் கிலோவுக்கு வெறும் ₹6.50 மட்டுமே கூலியாகப் பெற்றுப் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாகச் செயல்படாமல், கறிக்கோழி வாங்கும் பெரிய நிறுவனங்களுக்குச் சாதகமாகத் தமிழக அரசு நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது.
அவை மரபு மீறல்: அவசர கால முக்கியத்துவம் வாய்ந்த 'ஜீரோ ஹவர்' நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவரைப் பேச அனுமதிக்காதது ஜனநாயக விரோதமானது.
மடிக்கணினி அரசியல்: கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டத்தை நிறுத்தி வைத்திருந்த திமுக அரசு, தற்போது தேர்தல் நெருங்குவதால் மாணவர்கள் மத்தியில் உள்ள வெறுப்பைச் சமாளிக்க மீண்டும் மடிக்கணினிகளை வழங்குகிறது.
திட்டங்கள் காப்பி: மகளிருக்கு மாதம் ₹1500 வழங்கும் 'குலவிளக்கு' திட்டத்தை 2021-லேயே அதிமுக அறிவித்துவிட்டது. திமுக எப்போதும் அதிமுக-வின் தேர்தல் அறிக்கைகளையே பின்பற்றி வருகிறது.
கடந்த 6 மாதங்களாகப் போராடி வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறிவிட்டு, தற்போது அரசு பின்வாங்குவது ஏன் என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் வாக்குகளைக் கவரவே இத்தகைய கண்துடைப்பு நடவடிக்கைகளில் திமுக ஈடுபட்டுள்ளதாக அவர் சாடினார்.
English Summary
AIADMK Walkout EPS Slams Govt Over Broiler Farmers Wages and Laptop Politics