திமுக பாஜகவோடு நல்ல இணக்கத்தை உருவாக்கி விடக்கூடாது என்கிற பதட்டம் அ.தி.மு.க.விடம் தெரிகிறது...! -திருமாவளவன் - Seithipunal
Seithipunal


திருச்சி விமான நிலையம் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் ''தொல். திருமாவளவன்'' அவர்கள், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்தார்.

தொல். திருமாவளவன்:

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது,"ஏற்கனவே நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாள போராட்டம். அதுவே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றில்லை.தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை கேட்டு பெறவும், நிலுவையில் இருக்கக்கூடிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டியது முதலமைச்சருக்கு இருக்கக் கூடிய பொறுப்பு, கடமை.

பா.ஜ.க. அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு கவர்னர் மூலமாக நெருக்கடி தருவது என்பதை தாண்டி, அந்த மாநிலங்களுக்கு முறையாக வழங்க வேண்டிய நிதியையும் தருவதில்லை. ஒரு தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிட்டே இதை செய்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த தவறுவதால் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை தர மாட்டோம் என அடம் பிடிக்கிறார்கள்.

இது ஒரு எதேச்சதிகாரப் போக்கு. இவ்வாறு தடுத்து வைத்திருப்பதை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்பதை நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.இது தமிழக மக்கள் நலனுக்கு உகந்த அணுகுமுறை. இதை விமர்சிப்பது முற்றிலும் அரசியல் உள்நோக்கமுடையது. அரசியல் உள்நோக்கத்தோடு விமர்சிக்கும் போது எதையும் காரணமாக சொல்லலாம்.பா.ஜ.க., தி.மு.க.வோடு நெருங்கி விடக்கூடாது.

நல்ல இணக்கத்தை உருவாக்கி விடக்கூடாது என்கிற பதட்டம் அ.தி.மு.க.விடம் வெளிப்படுகிறது. தி.மு.க. மதச்சார்பற்ற கூட்டணியை தலைமை தாங்கி நடத்தும் போது அத்தகைய வரலாற்று பிழையை செய்யாது என்பது தமிழக மக்கள் உணர்ந்த உண்மை. அது எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும், ஆனால் தி.மு.க. மீது ஒரு சந்தேகத்தை எழுப்ப வேண்டும் என்பதற்காக இந்த விமர்சனத்தை முன்வைக்கிறார். கீழடி ஆய்வறிக்கை என்பது கற்பனையான ஒன்று அல்ல.

அதில் என்ன ஐயம் இருக்கிறது என்றால் அவர்கள் வெளிப்படையாக சொல்ல வேண்டும்.அவ்வாறின்றி அதனை திருப்பி அனுப்பி திருத்தம் செய்து அனுப்புங்கள் என்று சொல்வது எந்த அளவிற்கு தமிழர் தொன்மை குறித்த புரிதலில் அவர்கள் பின்தங்கி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.தமிழர்கள் சாதியற்றவர்கள், மதமற்றவர்கள் என்பதை உலக மாந்தர்களுக்கு வழிகாட்டும் வகையில் தனி திறன் பெற்றவர்கள் என்பதற்கான பல்வேறு தரவுகள் கிடைத்து வருகிறது.

அதற்கு கீழடி முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை வட இந்திய புராணத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ஒரு மொழி, ஒரு நாடு என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏற்புடையது அல்ல. யுபிஎஸ்சி தேர்வு மையங்களில் ஆங்கில அறிவிப்பு இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.இந்தப் பேட்டியின் போது பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் கிட்டு, மாநில, மாவட்ட செயலாளர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.இந்தக் கருத்திற்கு அவர்கள் ஆதரவும் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK seems anxious not to create a good rapport with DMK BJP Thirumavalavan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->