இழுபறியில் அதிமுக தொகுதி பங்கீடு! அடித்து ஆடும் ஸ்டாலின்! தொகுதி பங்கீட்டை முடித்த திமுக! அமைதி காக்கும் எடப்பாடி! - Seithipunal
Seithipunal


2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு விவகாரம் கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் அதனை இறுதி செய்துள்ளார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆட்சியில் பங்கு வேண்டும், அதிக தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் தரப்பு தொடர்ந்து முன்வைத்து வந்தது. குறிப்பாக பிரவீன் சக்ரவர்த்தி, கிரிஷ் சோடங்கர், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தலைவர்கள் இந்த கோரிக்கையை வெளிப்படையாக பேசினர். ஆரம்பத்தில் காங்கிரஸ் தலைமை சுமார் 41 தொகுதிகள் வரை எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் திமுக தரப்பில் கனிமொழி மூலம் டெல்லி தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது திமுகவின் நிலைப்பாடு தெளிவாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும் காங்கிரஸ் தலைமை தனது கோரிக்கையில் இருந்து உடனடியாக பின்வாங்கவில்லை.

இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் நேரடியாக, “இதுதான் வழங்கக்கூடிய பங்கீடு; அதற்குப் பிறகு உங்கள் முடிவை எடுத்துக்கொள்ளலாம்” எனக் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர் ப. சிதம்பரம் மூலமாக நடத்திய பேச்சுவார்த்தை மற்றும் கனிமொழி – சோனியா காந்தி இடையிலான ஆலோசனைகளுக்குப் பிறகு இறுதி ஒப்பந்தம் எட்டப்பட்டது.

இறுதியாக 28 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் என்ற அடிப்படையில் திமுக – காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதனால் திமுக தலைமையில் உள்ள கூட்டணி உறுதியடைந்ததாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

மறுபுறம், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஜனவரி மாத இறுதியிலேயே கூட்டணி அமைப்பு குறித்து அறிவிக்கப்பட்டாலும், பாஜக உட்பட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு விவகாரம் தொடர்ந்து இழுபறியாகவே இருந்து வருகிறது.

மார்ச் 6ஆம் தேதிக்குள் அதிமுக – பாஜக இடையிலான தொகுதி பங்கீட்டை முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. மேலும் திமுக – காங்கிரஸ் ஒப்பந்தம் வெளியாகும் முன்பே அதிமுக கூட்டணியின் பங்கீட்டை அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி விரும்பியதாக கூறப்படுகிறது. அதனால் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானது என்ற அரசியல் செய்தியை வெளியிட முடியும் என்ற கணக்கும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் ராஜ்யசபா வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பாகவே திமுக – காங்கிரஸ் இடையிலான ஒப்பந்தத்தை ஸ்டாலின் நிறைவு செய்ததால் அரசியல் சமன்பாடு மாறியதாக பார்க்கப்படுகிறது.

தற்போது திமுக கூட்டணியில் 21 கட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்த எந்தக் கட்சியும் வெளியேறாமல் இருப்பது ஸ்டாலினின் கூட்டணி மேலாண்மையை காட்டுகிறது என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

இதற்கிடையில், 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, எஸ்டிபிஐ போன்ற கட்சிகள் தற்போது அதிமுக அணியில் இல்லை. மேலும் புதிய தமிழகம் கட்சியும் இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், திமுக தரப்பில் கூட்டணி அமைப்பு வலுப்பெற்று முன்னேறிக் கொண்டிருக்க, அதிமுக தரப்பில் தொகுதி பங்கீடு குறித்து இன்னும் அமைதியான ஆலோசனைகள் மட்டுமே நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK seat sharing in a tug of war Stalin is playing catch up DMK completes seat sharing Edappadi keeps the peace


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->