#BREAKING | அதிமுக பொதுக்குழு வழக்கில் திடீர் திருப்பம் - உச்சநீதிமன்றத்தில் அரங்கேறிய அதிரடி மாற்றம்! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூடி, அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி சிறப்பு தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. 

இதனை எதிர்த்து பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என தீர்ப்பளித்தார். 

இதனை எதிர்த்து பழனிச்சாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் மேல்முறையீடு மனு குறித்து பதில் அளிக்குமாறு எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கின் இறுதி விசாரணை நவம்பர் 21 ஆம் தேதி (இன்று ) நடக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், திடீர் திருப்பமாக அதிமுக பொது குழு தொடர்பான மனுக்கள் புதிய அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதன்சு துலியா அமர்வில் அதிமுக பொதுக்குழு சம்பந்தமான வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK OPS VS EPS SC Case Judge change 112022


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->