அதிமுகவில் இருந்த முக்கிய புள்ளி பாஜகவில் இணைந்தார்.. இரண்டு நாட்களில் அடுத்தடுத்து நடந்த மாற்றம்.! - Seithipunal
Seithipunal


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர். இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி டி தினகரன் அறிவித்துள்ளார். ஏற்கனவே டிடிவி தினகரன் தன்னிச்சையான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி அதிமுக மற்றும் திமுகவை இணைந்து வருகின்றனர். 

இதனிடையே, அமமுக தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் நீலாங்கரை எம்சி முனுசாமி அமமுகவில் இருந்து விலகி கடந்த ஜனவரி 29ஆம் தேதி முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் இனை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். 

இந்நிலையில், பாஜகவின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மாநில பொது செயலாளர் கரு நாகராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நீலாங்கரை எம்சி முனுசாமி தன்னை பாஜகவில் இணைந்து கொண்டார். அதிமுகவில் இணைந்த இரண்டே நாட்களில் பாஜகவில் இணைந்த சம்பவம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aiadmk member join bjp


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->