நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்.!! திமுகவுக்கு ஈபிஎஸ் எச்சரிக்கை.!!
AIADMK EPS warning to DMK MKStalin
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் பல்வேறு பணிகள் முறையாக நடைபெறவில்லை என நகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் தங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நகராட்சி ஆணையர் மற்றும் செயற்பொறியாளர் கலந்து கொள்ளாதது ஏன் ஏனஅதிமுக கவுன்சிலர்கள் கேள்வி அனுப்பிய போது திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றி கை கலப்பாக மாறியது.

குறிப்பாக மேட்டுப்பாளையம் நகராட்சியின் 14வது வார்டு கவுன்சிலர் ரவிக்குமார் அதிமுக கவுன்சிலர் மீது நாற்காலிகளை தூக்கி எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் அதிமுக கவுன்சிலர் 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று மேட்டுப்பாளையம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் மேட்டுபாளையம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு சென்டனர்.

அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் அதிமுகவினருக்கும் காவல்துறையிருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் 2 அதிமுக எம்எல்ஏக்கள், 8 கவுன்சிலர்கள் மற்றும் அதிமுகவினர் 100க்கும் மேற்பட்டோரை கைது செய்து அழைத்துச் சென்றனர். தாக்குதல் நடத்திய திமுக கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிமுகவினரை கைது செய்ததற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக கவுன்சிலர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிமுகவின் கைது செய்யும் திமுக அரசின் அராஜக போக்கு கண்டிக்கத்தக்கது. தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
AIADMK EPS warning to DMK MKStalin