பிழைப்புக்காக.. அரசியல் தரகர்கள்! ஓபிஎஸ் அணியை போட்டு தாக்கிய அதிமுக தரப்பு! - Seithipunal
Seithipunal


சென்னையில் என்ற செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் அணியினரிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளி என விமர்சனம் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பண்ருட்டி ராமச்சந்திரன் "அவர் முதலமைச்சராக இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டார், It's a fact" என பதில் அளித்தது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பண்ருட்டி ராமச்சந்திரன் இந்த பதிலுக்கு அதிமுக தரப்பிலிருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலச் செயலாளர் உண்மையான ராஜ் சத்யன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "அஇஅதிமுக்காரன், புரட்சித்தலைவி அம்மாவின் மீது மரியாதையும் & அன்பும் வைத்திருக்க கூடியவன் , யாராக இருந்தாலும், அம்மாவை குற்றவாளி என சொல்லும் போது , “it’s a fact” என்று சொல்வார்களா,

அப்படி அறிவிழந்து பண்ருட்டி பேசும் போது , பக்கத்தில் பொம்மை போல் அமர வைக்க பட்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அவரின் கருத்தை ஏற்று கொள்கிறாரா?? அரசியலில் பிழைப்பு நடத்துவதற்காக எதை வேண்டுமானலும் செய்யலாமா ??தனக்கு வாழ்க்கை கொடுத்த தாயையே இழிவாக பேசுபவர்களுக்கு வாழ்க்கையை தண்டணைதான்… #அரசியல்தரகர்கள்" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK criticized ops and team


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->