நீங்களே திமுக ஊடகங்கள் ரேஞ்சுக்கு தரம் தாழ்வதா? பிரபல ஊடகத்திற்கு அதிமுக கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இரண்டு மணி நேரம் காத்திருந்தார் என்ற செய்தியை ஒரு பிரபல ஊடகம் வெளியிட்டது. 

அந்த செய்தியில், இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி குறுகிய நேரம் விஜயபாஸ்கருடன் பேசிவிட்டு பிரச்சாரத்துக்குப் புறப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.

இந்த செய்தி தொடர்பாக அதிமுக அதிகாரப்பூர்வமாக மறுப்பு வெளியிட்டுள்ளது. விஜயபாஸ்கர், பழனிசாமியை சந்திக்க நீண்ட நேரம் காத்திருந்ததாக கூறிய செய்தி முற்றிலும் தவறானது என்றும், யதார்த்தத்தை மாறுபடுத்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் கட்சி விளக்கம் அளித்துள்ளது.

அதில், "முற்றிலும் உண்மைக்கு புறம்பான கட்டுக்கதை!

செய்தி நிறுவனங்கள், உண்மையான நிகழ்வுகளை மக்களுக்கு அளிக்க வேண்டுமே தவிர, கிசுகிசு எழுதுவது போல இட்டுக்கட்டி செய்தி என வெளியிடக் கூடாது.

@NewsTamilTV24x7 ஒரு நடுநிலை ஊடகம் என நம்பிக் கொண்டிருக்கிறோம். நீங்களே சன் டிவி, கருணாநிதி டிவி, முரசொலி போன்ற திமுக ஊடகங்கள் ரேஞ்சுக்கு தரம் தாழ்வதா?

தவறான தகவல்களை தொடர்ந்து வெளியிட்டால், சட்டப்படி அடுத்தகட்ட நகர்வை நாங்களும் எடுக்க வேண்டியதாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK Condemn to News media


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...


செய்திகள்



Seithipunal
--> -->