இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்தவின் மனைவிக்கு எதிராக பிடியாணை..? அநுர திஸாநாயக்க திடீர் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


நமது அண்டைய நாடான இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு அந்நாட்டு அதிபர், அநுரகுமார திஸாநாயக்க பாதுகாப்புத் தரப்பினருக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

அதன்படி, இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய நபர்களுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, "சிறிலிய சவிய" (Siriliya Saviya) அறக்கட்டளை கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பில், முன்னாள் அதிபர் மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ பலமுறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த அறக்கட்டளை நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் போலி ஆவணங்கள் மூலம் வங்கிக் கணக்குகளைப் பராமரித்தமை ஆகியவை முக்கிய குற்றச்சாட்டுகளாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anura Dissanayake seeks arrest warrant against former Sri Lankan President Mahindas wife


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->