'விஜய்யின் தவெக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்புகள் இல்லை'; நயினார் நாகேந்திரன் பேட்டி..!
Nainar Nagendran states that Vijays TVK stands no chance of winning even a single constituency
இந்த தர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பே இல்லை. அவர் எந்த தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை என்று தமிழ்நாடு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் நேற்று நிருபர்களிடம் பேசிய இது குறித்து மேலும் கூறியதாவது:
கருத்துக்கணிப்புகள் முறையாக இருந்தால் நம்பிக்கை இருக்கும். ஆனால், இப்போது பல இடங்களில் அது கருத்துத் திணிப்பாக தான் இருக்கிறது எனது குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வரும் 04-ஆம் தேதி மக்களுடைய உண்மையான எண்ணங்கள் கண்டிப்பாக தெரிந்து விடும் வேண்டும், வாக்குப்பதிவுக்கு அப்புறம் விஜய் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பே இல்லை எனவும், தேர்தலுக்கு முன் ஏதாவது இருந்ததா? என்பதை தான் பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை விஜய் எந்த தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை என்று நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தலுக்குப் பிறகு தொங்கு சட்டசபை அமைந்தால் விஜய் ஆதரவை கேட்பீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், விஜய் அதிக தொகுதிகளில் ஜெயிக்கிறதுக்கு வாய்ப்பே இல்லை. அதற்கான பேச்சே தேவையில்லை என்று உறுதியாக கூறியுள்ளார்.
அத்துடன், உலக நாடுகள் இன்றைக்கு எவ்வளவு மோசமான சூழலில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். பக்கத்து நாடுகளில் கேஸ் கிடைப்பது இல்லை. ஈரான் - இஸ்ரேல் போர் என பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும், இந்தியா எல்லா நாடுகளுக்கும் ஒரு நட்பு நாடாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
அதாவது, பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை சயைல் கேஸ், டீசல், பெட்ரோல் என எதுவாக இருந்தாலும் மக்களின் நலன் கருதித்தான் முடிவெடுப்போம் என்றும், சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் தான் வெற்றி பெறப் போகிறோம் என்பதால் அமைதியாக இருக்கிறோம் வேண்டும் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
English Summary
Nainar Nagendran states that Vijays TVK stands no chance of winning even a single constituency