'குழந்தைகள் பிரித்து வைக்கப்பட வேண்டிய ஏவுகணைகளா...? ஒரு குழந்தையை தனது உடன்பிறப்புகளிடமிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு வளர்க்கப்படக்கூடாது'; உயர்நீதிமன்றம்..!
The High Court has ruled that a child should not be raised in complete isolation from their siblings
ஒரு குழந்தையை தனது உடன்பிறப்புகளிடமிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு வளர்க்கப்படக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.
கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்ற நிலையில், இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி தாய் சென்னை நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
குறித்த வழக்கு விசாரணைக்கு வந்ததில் குறித்த தம்பதியின் பெண் குழந்தையை தாயின் பராமரிப்பில் ஒப்படைக்கவும், ஆண் குழந்தையை தந்தையின் பராமரிப்பில் ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அனால், இதை எதிர்த்து தாய், ஆண் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது; ஆண் குழந்தை தனது தந்தையுடன் இனிமையாக நேரத்தை
செலவிட்டேன். தற்போது தனது பாட்டியின் (தந்தையின் தாய்) பராமரிப்பில்
உள்ளேன் என தெரிவித்துள்ளார். ஆகவே, ஒரு குழந்தை தனது உடன்பிறப்புகளிடமிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட
நிலையில் வளர்க்கப்படக் கூடாது.
குழந்தைகள் தனித்தனி அறைகளில் பிரித்து வைக்கப்பட வேண்டிய ஏவுகணைகள் அல்ல. குழந்தையை தந்தையின் பராமரிப்பிலிருந்து திடீரென பிரிப்பது, அக்குழந்தைக்கும் சரி, அதன் பெற்றோருக்கும் சரி இருவரின் நலன்களுக்கும் உகந்ததாக அமையாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தந்தை தற்போது வெளியூரில் பணியில் உள்ளதால், இடைக்கால ஏற்பாடாக சிறுவன் மனுதாரரான தாயின் பராமரிப்பில் இருப்பார் என்றும், இக்காலகட்டத்தில் தந்தை மனுதாரரின் வீட்டிற்கு சென்று, இரு குழந்தைகளையும் சந்திக்கும் உரிமை உள்ளது என்றும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு தந்தை தனது மகனை சந்திக்க வரும்போது, மனுதாரர் எவ்வித தடையையும் ஏற்படுத்தக் கூடாது.
ஏதேனும் தடை ஏற்படுத்தினால் இந்நீதிமன்ற உத்தரவை மாற்றியமைக்க தந்தை மனு தாக்கல் செய்ய உரிமை உண்டு என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
The High Court has ruled that a child should not be raised in complete isolation from their siblings