அடேங்கப்பா... "காலில் விழுந்தவர்" தானே கருணாநிதி? அவரின் "மூட் ஸ்விங்ஸ்" பற்றி பேசுவோமா? சூடு பிடித்த இணைய வார்த்தை போர்! - Seithipunal
Seithipunal


அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், இதை விமர்சிக்கும் வகையில் திமுக ஐடி விங்க், "அவருக்கு காரியம் நடக்கனும்னா கால கூட பிடிப்பாங்க.. காரியம் முடிஞ்சா கால வாரி விட்டுடுவாங்க.." என்று பதிவிட்டு இருந்தது.

இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "அடேங்கப்பா... கருணாநிதியின் Mood Swings பற்றி பேசுவோமா?

எமர்ஜென்சியை எதிர்த்துவிட்டு, அந்த எமர்ஜென்சியை கொண்டு வந்த இந்திரா காந்தியை "நேருவின் மகளே வருக- நிலையான ஆட்சி தருக" என்று காலில் விழுந்தவர் தானே கருணாநிதி?

இன்று பாஜக-வை எதிர்ப்பதாக நாடகம் போடும் தி.மு.க, அதே பாஜக அரசுடன் கூட்டணி வைத்து 5 ஆண்டுகள் பவனி வந்ததும், அன்றைக்கு பாஜக-வுக்கு சூடிய புகழ்மாலைகளையும் மறந்துவிட்டதா?

2004ல் அதே பாஜக காலை வாரிவிட்டு, காங்கிரஸ் காலில் திமுக விழுந்த கதையை மக்கள் மறந்துவிடவில்லை.

காங்கிரஸ் ஆட்சியின் அத்தனை தமிழினத் துரோகத்திற்கும் துணை நின்று, 2014ல் காங்கிரஸ் தோற்கப் போகிறது எனத் தெரிந்ததும், காங்கிரஸ் காலை வாரி விட்ட கட்சி தானே திமுக?

இனி காங்கிரசுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்று அன்று பிரகடனப் படுத்தியவர் தானே முக ஸ்டாலின்?

காலை வாரிய காங்கிரஸ் கட்சியிடம், சிறுபான்மை மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், மீண்டும் காலில் விழுந்த கட்சி தானே தி.மு.க?

இத்தனை அந்தர்பல்டிகளை அடித்துவிட்டு, எங்களைப் பற்றி பேச துளியாவது உங்களுக்கு அருகதை உள்ளதா?

ஆனால் ஒன்று நன்றாகப் புரிகிறது- மாண்புமிகு புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கூட்டணிக் கணக்குகள் அறிவாலயத்தை கலக்கமடைய ஆரம்பித்துவிட்டது.

திமுக ஐடி விங்க் பீதி நன்றாக தெரிகிறது! Brace Yourselves for the Wildfire! என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK BJP Alliance DMK Comment


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->