அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா? என்பது தெரியவில்லை... ஆனால்,திமுக கூட்டணி வலுவானது...! - திருமாவளவன்
AIADMK BJP alliance continue It is not known But DMK alliance is strong Thirumavalavan
திருச்சி துறையூரில் இம்மாதம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.இதில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினருமான, தொல். திருமாவளவன் அவர்கள், சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்தார்.அங்கு திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தொல். திருமாவளவன்:
அப்போது அவர் தெரிவித்ததாவது,"திருச்சியில் 31-ந் தேதி நடைபெற இருந்த மத சார்பின் காப்போம் பேரணி ஜூன் மாதம் 14-ந்தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இந்தப் பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் மட்டுமின்றி, சட்டத்தின் மீதும், மதசார்பின்மை, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் இந்த பேரணியில் கலந்து கொள்ள வேண்டும்.
பல்கலைக்கழக விவாகரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் குடியரசு தலைவரை கொண்டு பா.ஜ.க. அரசு 14 கேள்விகளை கேட்க வைத்துள்ளது.இந்தியா கூட்டணி வலிமையாக இல்லை என ப.சிதம்பரம், எதன் அடிப்படையில் தெரிவித்தார் என்று தெரியவில்லை.
ஆனால் இந்தியா கூட்டணி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சந்தித்து ஒரு வருடம் ஆகிறது. தேவைப்படும் போது ஒன்றிணைந்து செயல்படும்.தி.மு.க. இந்திய கூட்டணியில் முக்கியமாக உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தான் கூட்டணி என்கிற வடிவத்தோடு இருக்கிறது. வேறு எந்த கூட்டணியும் கூட்டணி என்கிற வடிவத்தோடு இல்லை.அ.தி.மு.க., பா.ஜ.க. இணைந்து தேர்தலை சந்திப்போம் என தெரிவித்துள்ளார்கள். ஆனால் அவர்கள் கூட்டணி தொடருமா? என்பது தெரியவில்லை.அவர்கள் கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்டவர்கள் கூட்டணி குறித்து எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை.தற்போது எதிர்க்கட்சிகள் ஐக்கியமாக போதிய முகாந்திரங்கள் இல்லை.தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலுவாக உள்ளது. வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்" எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
AIADMK BJP alliance continue It is not known But DMK alliance is strong Thirumavalavan