அதிமுகவின் முன்னாள் முக்கிய புள்ளியின் சகோதரர் கைது! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர்: ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் வரை மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜய நல்லதம்பி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான விஜய நல்லதம்பி, ஜாமின் பெற்று வெளியே வந்த நிலையில், நிபந்தனையை மீறியதால் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளார். 

கைதான விஜய நல்லதம்பி அதிமுக ஒன்றிய செயலாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ரூ.1000 லஞ்சம் வாங்கிய வழக்கில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது!

கடந்த 2009ம் ஆண்டு, ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் புதிய மின்சார இணைப்புக்கு ரூ.1000 லஞ்சம் வாங்கிய புகாரில் கைதான இளநிலை பொறியாளர் முருகன் என்பவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும், ரூ.1000 லஞ்சம் வாங்கியதற்கு ரூ.2000 அபராதம் விதித்தும் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Virudhunagar Vijaya nallathambi arrested


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->