பெரும் அவமதிப்பு! செங்கோட்டையன் அறிக்கையால் கொந்தளிக்கும் அதிமுகவினர்!  - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் அந்த அறிக்கையில், இன்றைய உலக தலைவர்களில் முதன்மையானவராக திகழும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களாலும், இந்திய திருநாட்டின் இன்றைய இரும்பு மனிதராக திகழும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களாலும் முன்மொழியபட்டவரும், இதயதெய்வம் புரட்சித்தலைவர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அன்பை பெற்றவரும், நம் தமிழ்தேசத்தின் தனிபெரும் தலைவர் மேதகு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பாரத திருநாட்டின் துணை குடியரசு தலைவராக தேர்வு பெற்று உள்ளது இந்நாட்டின் பொன்னேட்டில் எழுதப்படும் திருநாள் ஆகும்.

தன் பணிகாலத்தில் இந்திய தேசத்தை உயரத்திற்கு எடுத்து செல்ல மனம்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், செங்கோட்டையனின் இந்த அறிக்கை அதிமுகவினரிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. காரணம், அவர் முதலில் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா பெயர்களைச் சொல்லி பின்னர் தான் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா பெயர்களை குறிப்பிட்டுள்ளார். இதனால், கட்சித் தொண்டர்கள் மற்றும் சில நிர்வாகிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

Sengottaiyan PM Modi amith shah 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMk Sengottaiyan statement Condemn Modi JJ MGR


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->