41 உயிர்கள் பலியான அந்தப் பெருஞ்சோகம்... ஓராண்டுக்குப் பின் ஜூலை 10, 11-ம் தேதிகளில் கரூருக்கு நேரில் செல்லும் முதல்வர் விஜய்...! - Seithipunal
Seithipunal


கரூரை உலுக்கிய கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்குப் பிறகு, முதல்-அமைச்சர் விஜய் மீண்டும் கரூர் செல்ல உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடையிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற த.வெ.க. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த துயர சம்பவத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்தச் சம்பவம் நடந்த உடனடியாக பாதுகாப்பு சூழ்நிலையும் காவலர்களின் அறிவுறுத்தல்களும் காரணமாக விஜய்யால் கரூர் சென்று மக்களை நேரில் சந்திக்க முடியவில்லை.

இருப்பினும், காணொலி வாயிலாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் மாமல்லபுரத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அவர்களின் துயரத்தில் பங்கேற்று ஆறுதல் கூறினார்.அப்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்த தொகை உடனடியாக சம்பந்தப்பட்ட குடும்பங்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தேவையான அனைத்து உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும் என விஜய் உறுதியளித்திருந்தார்.இந்த நிலையில், வருகிற 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் முதல்-அமைச்சர் விஜய் கரூர் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மீண்டும் ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.அதனைத் தொடர்ந்து அரசு சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்கள் நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

கரூரைத் தொடர்ந்து மாநிலத்தின் பிற மாவட்டங்களுக்கும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் வெற்றிக்காக மக்களிடம் நன்றி தெரிவிப்பதோடு, மாவட்டந்தோறும் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tragedy that claimed 41 live Chief Minister Vijay visit Karur person July 10th and 11th after year


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->