'தாயகப் பிரி​வினை​யின்​ போது உயிர்​களை நீத்​த​வர்களின் தியாகம் மற்​றும் தீரத்தை இந்​தத் தேசம் என்​றும் மறவாது.' பிரதமர் மோடி..! - Seithipunal
Seithipunal


''தாயகப் பிரி​வினை​யின்​போது சொல்​லொணாத் துயரங்​களைச் சந்​தித்​த​போ​தி​லும், மீண்​டெழுந்து நின்று மீண்​டும் வாழ்க்கையைக் கட்​டமைத்த மனிதர்​களின் தியாகம் மற்​றும் தீரத்தை இந்​தத் தேசம் என்​றும் மறவாது.'' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்​தி​யப் பிரி​வினை​யின்​ போது நிகழ்ந்த வன்​முறை​கள், உயி​ரிழப்​பு​கள் மற்​றும் லட்​சக்​கணக்​கான மக்​களின் இடப்​பெ​யர்வு தொடர்பான துயரங்​களை நினை​வு​கூரும் வகை​யில், ஆண்​டு​தோறும் ஆகஸ்ட் 14-ம் தேதி பிரி​வினை கொடுமை நினைவு தின​மாக கடைப்​பிடிக்​கப்​பட்டு வரு​கிறது.

இதுகுறித்து பிரத​மர் மோடி தனது எக்ஸ் பக்​கத்​தில் குறிப்பிட்டுள்ளதாவது;

''பிரி​வினை கொடூர நினைவு தின​மான இன்​று, நாட்​டின் பிரி​வினை​யால் பாதிக்​கப்​பட்ட எண்​ணற்ற மக்​களின் மன உறு​தி​யை​யும் தியாகத்​தை​யும் நினை​வு​கூர்​கிறோம்.

தாயகப் பிரி​வினை​யின்​போது சொல்​லொணாத் துயரங்​களைச் சந்​தித்​த​போ​தி​லும், மீண்​டெழுந்து நின்று மீண்​டும் வாழ்க்கையைக் கட்​டமைத்த மனிதர்​களின் தியாகம் மற்​றும் தீரத்தை இந்​தத் தேசம் என்​றும் மறவாது.

வரலாற்​றின் அந்​தப் பேர​வலத்​தில் தங்​களது உயிர்​களை நீத்​த​வர்களுக்​கும், வாழ்​வா​தா​ரங்​களை இழந்து புலம் பெயர்ந்​த​வர்களுக்​கும் எனது நெஞ்​சார்ந்த அஞ்​சலியைச் செலுத்​துகிறேன்.'' என்று பிரதமர் ​மோடி பதிவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi says that the Indian nation will never forget the sacrifices of those who lost their lives during the partition of the country


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?


செய்திகள்



Seithipunal
--> -->