''அருணாச்சலில் சீனா​வின் எந்த புதிய ஆக்​கிரமிப்​பும் நடை​பெற​வில்​லை.''; ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு மறுப்பு..! - Seithipunal
Seithipunal


அருணாச்சல பிரதேச மாநிலத்​தின் பல பகு​தி​களை சீனா உரிமை கொண்​டாடி வருகிறதோடு, அந்த மாநிலத்தை ஜாங்​னான் என்​றும் குறிப்​பிட்டு வரு​கிறது. சீனா​வின் இத்​தகைய அத்துமீறல் போக்​குக்கு மத்​திய அரசு தொடர்ந்து பதிலடி கொடுத்து வரு​கிறது. குறிப்​பாக, அருணாச்சல பிரதேசத்​தின் 27 இடங்​களை உள்​ளடக்​கிய அதி​காரப்​பூர்வ வரைபடத்தை இந்​தியா அண்​மை​யில் வெளி​யிட்டுள்​ளது.

இந்​நிலை​யில், மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி நேற்று, அருணாச்சல பிரதேச மாநிலத்​தின் பல பகு​தி​களில் நமது ராணுவ வீரர்​கள் ரோந்​து, கண்​காணிப்​புப் பணிக்​குச் சென்​ற​போது சீன ராணுவம் தடுத்து நிறுத்​தி​யதாக குற்​றம்​ சுமத்தியிருந்தார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலை​தளத்​தில் குறிப்பிட்டுள்ளதாவது;

''அருணாச்​சலின் பல இடங்​களில் இந்​திய ராணுவ வீரர்​கள் ரோந்து சென்​ற​போது அவர்​களை சீன ராணுவ அதி​காரி​கள் தடுத்து நிறுத்​திய சம்​பவம் நடந்​துள்​ளது. இதுதொடர்​பாக பதில் அளிக்​காமல் மத்​திய பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் வாய்​மூடி மவுன​மாக உள்​ளார்''என்று குறிப்பிட்டு இருந்தார்.

ராகுல் காந்​தி​யின் குற்​றச்​சாட்​டுக்கு மத்​திய நாடாளு​மன்ற விவ​காரத்​துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு விளக்​கம் அளித்​து கூறிய​தாவது: 

''அருணாச்சல பிரதேசத்​தில் கால்​நடை மேய்ச்​சல் குறித்து அங்கு வசிக்​கும் உள்​ளூர் மக்​களின் கவலைகள் அனைத்​தும் நியாய​மானவையே. அந்​தப் பகுதி மக்​களின் உணர்​வு​கள் அனைத்​தும் மிக முக்​கிய​மாக கருத்​தில் கொள்​ளப்​படும். ஆனால், அண்​மை​யில் அங்கு சீனா​வின் எந்த புதிய ஆக்​கிரமிப்​பும் நடை​பெற​வில்​லை.'' என்று பதிலளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Union Minister Kiren Rijiju refutes Rahul Gandhis allegation that Chinas invasion of Arunachal Pradesh is not taking place


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?


செய்திகள்



Seithipunal
--> -->