''சுதந்​திரத்​தின் போது மோடி இந்​தி​யா​வின் பிரதம​ராக இருந்​திருந்​தால் வரலாறு வேறு மாதிரி​யாக இருந்​திருக்​கும்''; யோகி ஆதித்யநாத் பேச்சு..! - Seithipunal
Seithipunal


''சுதந்​திரத்​தின் போது நரேந்​திர மோடி இந்​தி​யா​வின் பிரதம​ராக இருந்​திருந்​தால் வரலாறு வேறு மாதிரி​யாக இருந்​திருக்​கும்.'' என உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்​னோ​வில் நேற்று நடை​பெற்ற ‘பிரி​வினை கொடுமை நினைவு நாள்’ நிகழ்ச்​சி​யில் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அங்கு அவர் உரையாற்றுகையில் கூறியதாவது;

அரசி​யல் அதி​காரத்​துக்கு முன்​னுரிமை அளித்​ததன் மூலம் காங்​கிரஸ் கட்சி நாட்​டுக்​குத் துரோகம் இழைத்​து​விட்​டதாகவும், சுதந்​திரத்​தின்​போது நமது நாடு பிளவுபட்​டதற்கு காரணம் காங்​கிரஸ் கட்​சி​தான் என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன், சுதந்​திரத்​தின் போது நரேந்​திர மோடி இந்​தி​யா​வின் பிரதம​ராக இருந்​திருந்​தால் வரலாறு வேறு மாதிரி​யாக இருந்​திருக்​கும். யாராலும் இந்​தி​யா​வுக்கு சிறிதள​வும் பாதிப்பை ஏற்​படுத்​தி​யிருக்க முடி​யாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சர்​தார் வல்​ல​பாய் படேல் போன்ற ஒரு தலை​வர் ஆட்​சி​யில் இருந்​திருந்​தால் இந்​தி​யா​வைப் பிளவுபடுத்த அனு​ம​தித்​திருக்க மாட்​டார் என்றும், காங்​கிரஸ் தலை​வர்​களின் செயலுக்​காக நாடு பெரும் விலை​யைக் கொடுக்க வேண்​டி​யிருந்​தது என்று கூறியுள்ளார்.

சுதந்​திரத்​தின்​போது வங்​கம், வங்​காள மக்​கள் அதி​கம் வசித்த பகு​தி​யாக இருந்​தது. இந்​துக்​கள் அதி​கம் வசித்த கிராமங்​கள் அனைத்​தும் கட்​டாய​மாக வங்​கதேசத்​திடம் ஒப்​படைக்​கப்​பட்​டன என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், அதி​காரத்​தைக் கைப்​பற்​று​வ​தில் அதீத ஆர்​வம் காட்​டிய காங்​கிரஸால் இந்த அவமானகர​மான செயல் செய்​யப்​பட்​டது என்றும், நாடு அந்​தக் கட்​சி​யின் மீது நம்​பிக்கை வைத்​திருந்​தது, ஆனால் அக்​கட்சி அந்த நம்​பிக்​கைக்​குத் துரோகம் இழைத்​ததாக யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Yogi Adityanath said that history would have been different if Modi had been the Prime Minister of India at the time of Independence


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?


செய்திகள்



Seithipunal
--> -->