ரூ.4,000 கோடி முதலீடு: தமிழக அரசுடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்துள்ள டெய்ம்​லர் இந்​தியா; 400 பேருக்கு வேலைவாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


டெய்ம்​லர் இந்​தியா கமர்​ஷியல் வெஹிகல்ஸ் (டிஐசி​வி) நிறுவனம் தமிழகத்​தில் ரூ.4,000 கோடி கூடு​தல் முதலீடு செய்யவுள்​ள​தாக அறி​வித்​துள்​ளது. இது தொடர்​பாகத் தமிழக அரசுடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தத்​தில் டெய்ம்​லர் இந்​தியா கையெழுத்​திட்​டுள்​ளது.

பாரத்​பென்ஸ் வர்த்தக வாக​னங்​களைத் தயாரித்து வரும் டிஐசி​வி நிறுவனம், தனது அடுத்​தகட்ட வளர்ச்சி பயணத்​தின் ஒரு பகுதியாக தமிழகத்​தில் முதலீடு செய்யவுள்​ளது. இதன் மூலம், இந்​தி​யா​வில் அந்​நிறு​வனத்​தின் ஒட்​டுமொத்த முதலீடு ரூ.14,500 கோடியை தாண்​டி​யுள்​ளது.

இந்த புதிய முதலீட்டின் மூலம் பாரத்​பென்ஸ் வாக​னங்​களின் புதிய தயாரிப்பு மேம்​பாடு, உற்​பத்தி விரி​வாக்​கம், ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாடு, உள்​கட்​டமைப்பு வசதி​கள் ஆகியவை மேம்​படுத்​தப்​பட​வுள்​ளன.

இந்த முதலீட்​டுத் திட்​டத்​தின் மூலம் தமிழகத்​தில் சுமார் 400 பேருக்​கு வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   அதாவது, சென்னை அருகே ஒரகடத்​தில் 400 ஏக்​கர் பரப்​பள​வில் ஒருங்​கிணைந்த உற்​பத்தி மற்​றும் ஆராய்ச்சி மையத்​தைக் கொண்டுள்ள டெய்ம்​லர் நிறு​வனத்​தில், தற்​போது 4,000-க்​கும் மேற்​பட்ட ஊழியர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர்.

பாரத்​பென்ஸ் வாக​னங்​களின் உதிரி​பாகத் தேவை​யில் 92 சதவீதத்தை தமிழகத்​தைச் சேர்ந்த 400-க்​கும் மேற்​பட்ட உள்​ளூர் விநி​யோகஸ்​தர்​கள் மூலமே இந்​நிறு​வனம் பூர்த்தி செய்து வருகின்றமை குறிப்​பிடத்​தக்​கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Daimler India has signed a Memorandum of Understanding with the TN govt for an investment of Rs 4000 crore


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?


செய்திகள்



Seithipunal
--> -->