தமிழக காவல்துறையின் மெகா அதிரடி...! பாலியல் குற்றவாளிகளை 8 தனிப்பிரிவுகளாக வகைப்படுத்தி 24 மணி நேரமும் கண்காணிக்கப் புதிய திட்டம் அமல்...!
Tamil Nadu Police mega action new plan classify haassment offenders 8 separate categories and monitor them 24 hours day implemented
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் முற்றிலும் இல்லாத பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்குவதே தனது முக்கிய இலட்சியம் என முதலமைச்சர் விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அந்த கனவை நனவாக்கும் நோக்கில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தென் மாவட்டங்களில் பாலியல் குற்றங்களை முற்றிலும் கட்டுப்படுத்தி, குற்றவாளிகளை விரைவாக சட்டத்தின் முன் நிறுத்தும் நோக்கில் சிறப்பு அதிரடி திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி முன்னெடுத்து தீவிரமாக செயல்படுத்தி வருகிறார்.

தென் மாவட்டங்களில் நல்ல பலனை அளித்து வரும் இந்த திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் அறிவித்துள்ளார். இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் ஏற்கனவே தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி நேற்று அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது,"நான் சர்வதேச காவலர்கள் அமைப்பில் சில ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவன். அங்கு பாலியல் குற்றவாளிகள், அவர்கள் மேற்கொள்ளும் குற்றங்களின் தீவிரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு 8 பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றனர்.
ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி நிற அடையாளங்கள் வழங்கப்படுகின்றன.இந்த நிற அடையாள பட்டியலில் இடம்பெறும் குற்றவாளிகள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களின் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதோடு, அவர்கள் மீது பதிவான வழக்குகள் நீதிமன்றத்தில் உறுதியான ஆதாரங்களுடன் முன்வைக்கப்படும்.
இதன் மூலம் உரிய தண்டனையை விரைவாக பெற்றுத்தர முழு கவனமும் செலுத்தப்படும்.இதே மாதிரியான திட்டத்தை கடந்த ஒரு மாதமாக தென் மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்தியுள்ளோம். குற்றங்களின் தன்மை மற்றும் அபாய அளவை அடிப்படையாகக் கொண்டு 8 நிறங்களாக பிரித்துள்ளோம்.
இதில் மிகுந்த அபாயம் கொண்ட பாலியல் குற்றங்கள் சிவப்பு நிறப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.இந்த திட்டம் தென் மாவட்டங்களில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க பலனை அளிக்க தொடங்கியுள்ளது. குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவும் இந்த திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்” என்றார்.
English Summary
Tamil Nadu Police mega action new plan classify haassment offenders 8 separate categories and monitor them 24 hours day implemented