மேற்கு வங்காளத்தில் பயங்கரம்...! எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் கொழுந்துவிட்டு எரியும் ராட்சத தீ...! - 15 பேர் உடல் கருகிப் படுகாயம்...! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்காளத்தின் ஹல்டியா நகரில் உள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிதினிபூர் மாவட்டம் ஹல்டியா நகரில் செயல்பட்டு வரும் மிகப்பெரிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல், டீசல், நாப்தா உள்ளிட்ட பல்வேறு எரிபொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

அவற்றில் நாப்தா, வாகனங்களுக்கு நேரடி எரிபொருளாக பயன்படுத்தப்படாத போதிலும், பிளாஸ்டிக், பெயிண்ட், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வேதிப்பொருட்கள் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாக பயன்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று அதிகாலை சுத்திகரிப்பு நிலையத்தில் நாப்தா எரிபொருளை எடுத்துச் செல்லும் குழாயில் திடீரென தீப்பற்றியது. சில நொடிகளில் தீ மளமளவென பரவி, அப்பகுதி முழுவதும் பதற்ற சூழலை உருவாக்கியது.தீ விபத்தில் சிக்கி 15 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடினர்.

இந்த சம்பவம் குறித்து காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட ஆய்வில் தொழில்நுட்ப கோளாறு அல்லது குழாய் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Terror West Bengal huge fire breaks out fuel refinery 15 people charred and seriously injured


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->