கும்மிடிப்பூண்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: களத்தில் இறங்கிய அதிமுக!
ADMK Protest kummudipoondy child harassment
கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த 12ஆம் தேதி பள்ளி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுமி, மர்ம நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்துக்குப் பிறகு சிறுமி சென்னை குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், சம்பவம் நடந்து எட்டு நாட்கள் ஆனாலும் குற்றவாளி கைது செய்யப்படாததை கண்டித்து, அதிமுகவினர் இன்று ஆரம்பாக்கம் காவல் நிலையம் அருகே முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, மீனவர் அணி மாநில துணைச் செயலாளர் ஜெ. சுரேஷ், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் டி.சி. மகேந்திரன் மற்றும் ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு தலைமையிலான பலர் ஒருங்கிணைப்பு செய்தனர். இதில், 300க்கும் மேற்பட்ட பெண்கள், 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் உள்பட 500 பேர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாக காவல் நிலையம் சென்றனர்.
காவல் நிலையத்திற்குள் நுழைய முயன்ற போது, போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதிமுகவினர் உள்ளே நுழைந்து, குற்றவாளியை உடனடியாக கைது செய்ய கோரிக்கை மனுவும் அளித்தனர்.
பின்னர், சில பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். சம்பவம் தொடர்பாக ஆரம்பாக்கத்தில் பதற்றம் நிலவுகிறது.
English Summary
ADMK Protest kummudipoondy child harassment