திமுக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்.!! - Seithipunal
Seithipunal


திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌, மக்கள்‌ பிரச்சனைகளில்‌ கவனம்‌ செலுத்தாத திமுக அரசைக்‌ கண்டித்து,
கழகத்தின்‌ சார்பில்‌ மாவட்ட தலைநகரங்களில்‌ இன்று வெள்ளிக்‌ கிழமை காலை 10 மணியளவில், மாபெரும்‌கண்டன ஆர்ப்பாட்டம்‌ நடைபெறும்‌ என்பதைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌ என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளனர்.

அதன்படி, மாவட்ட தலைநகரங்களில்  இன்று  காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு, பொங்கல் பரிசு தொகை, மழை வெள்ள இழப்பீடு உள்ளிட்டவைகளை வலியுறுத்தி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

admk protest against dmk govt


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->