ஆளுநர் உயிருக்கு அச்சுறுத்தல்.. குடியரசுத் தலைவர், பிரதமருக்கு பறந்த மனு.. சிக்கலில் திமுக அரசு.!!
ADMK Petition for Governor issue
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று முன் தினம் மயிலாடுதுறையில் தருமபுர ஆதீனம் அவர்களை சந்தித்துவிட்டு திரும்பி வரும் வழியில், மன்னம்பந்தல் என்ற இடத்தில் ஆளுநரின் வருகைக்கு எதிராக திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர் உரிமை இயக்கம், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து.
நீட்தேர்வு, 7 பேர் விடுதலை உள்ளிட்ட பதினெட்டு மசோதாக்களுக்கு, தீர்மானங்களும் முடக்கப்பட்டுள்ளன. ஆர்எஸ்எஸ் சிந்தனையை போற்றுகிற ஒரு ஆளுநரை ஆதீன நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பது தமிழ் நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என தெரிவித்தனர்.
கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆளுநரின் கவனத்தை ஈர்க்க முடியாததால், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள் மற்றும் கருப்பு கொடிகளை வீசி எறிந்தனர். இதையடுத்து, அறவழியில் போராட்டம் நடத்தியவர்கள், வன்முறையில் ஈடுபடக்கூடாது என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. ஆளுநரின் சுற்றுப் பயணத்தின்போது பாதுகாப்பு குறைபாடு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என திறம்பட செயலாற்றாத திமுக அரசின் மீது அரசியல் சாசனத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆளுநர் உயிருக்கு அச்சுறுத்தல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம், பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு என குடியரசுத் தலைவர், பிரதமருக்கு அதிமுக நிர்வாகி ஆர்.எம்.பாபு முருகவேல் மனு அளித்துள்ளார்.
English Summary
ADMK Petition for Governor issue