எடப்பாடி பழனிசாமிக்கு கேட் போட்ட ஓபிஎஸ் - கடைசி நேரத்தில் நடந்த டிவிஸ்ட்! - Seithipunal
Seithipunal


பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் அணி அணிவிக்கும் அதிகாரத்தை பெறுவதற்கு, அதிமுகவின் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பினர் இடையே மோதல் வெடித்தது.

இதில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.

இந்த வழக்கு விசாரணையின் போது ஓ பன்னீர்செல்வம் தரப்பில், "அதிமுக கட்சி விதிமுறைகளின் படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஓர் இணைப்பாளர் இருக்கும்போது தற்காலிக பொருளாளருக்கு எந்த வித அதிகாரமும் கிடையாது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் இருக்கிறது.

மேலும், அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளர் நியமனம் செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் தற்போது வரை அங்கீகரிக்கவில்லை. எனவே தங்க கவசத்தை எங்களிடம் ஒப்படைக்கவில்லை எனில், மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று ஓ பன்னீர்செல்வத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில், "2190 அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் இணைந்து, இடைக்கால பொதுச் செயலாளரை தேர்வு செய்துள்ளனர். இதனை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் செல்லும் என்று சுட்டிக்காட்டி உள்ளது.

ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் தங்கக் கவசத்தை பெறுவதற்கான எந்த அதிகாரமும் கிடையாது. சட்டப்படி அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் தங்க கவசத்தை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்று வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இருவருக்கும் தங்க கவசத்தை பெரும் உரிமையை கொடுக்காமல் கடந்த 2017 ஆம் ஆண்டு போல மாவட்ட நிர்வாகத்திடமே ஒப்படைத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK OPS vs EPS HC Devar


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->