மதுசூதனனுக்கு என்ன ஆனது., அதிமுகவின் அதிகாரபூர்வ தகவல் வெளியானது.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் அவைத் தலைவருமான மதுசூதனனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரின் உடல் நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று, அதிமுகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கோரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலம் அதிமுக-வின் அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். ஜெயலலிதாவின்  மறைவுக்குப் பின்னர் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருப்பதால் மருத்துவர்கள், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும் அவரின் உடல்நிலை முன்னேற்றம் அடையவில்லை என்று, மருத்துவமனை வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் வலைதள பக்கத்தில் ஒரு செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், "கழக அவைதலைவர் திரு. மதுசூதனன் அவர்களின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம், தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk official twitter page say about madhusudanan health


கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்Advertisement

கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Seithipunal