அதிமுக எம்.எல்.ஏ.க்கும், அமைச்சருக்கும் கோஷ்டி மோதல்.! சாபம் கொடுத்த எம்.எல்.ஏ.!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர் கருப்பண்ணனுக்கும், பெருந்துறை அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் இடையே கோஷ்டி மோதல் நிலவி வருகிறது. இதன் காரணமாக உள்ளாட்சி மறைமுகத் தேர்தலில் தோப்பு வெங்கடாசலம் ஆட்களை வெற்றி பெறுவதை தடுத்துவிட முடிவு செய்துவிட்டாராம் அமைச்சர் கருப்பண்ணன்.

இதனை தொடர்ந்து தோப்பு வெங்கடாச்சலத்தின் ஆதரவாளர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் கருப்பண்ணன் நீக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் நடக்கவிருக்கும் நகராட்சி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என புகார் அளித்து இருந்தனர்.

புகார் அளித்தும் ஒன்றும் நடக்கவில்லை. இப்போது ஒரு புதிய ஆயுதத்தை கையில் எடுத்து உள்ளனர். பெருந்துறை தொகுதியில் செயல்படுத்தப்பட இருக்கும் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை கருப்பண்ணன் கெடுக்கப் பார்க்கிறார். 

ஊரு முழுவதும் சாயக் கழிவுநீர் ஓடிக்கொண்டிருக்கும் போது அதைக்கவனிக்காமல் குத்துப் பாடல்களுக்கு ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கிறார் அமைச்சர் கருப்பண்ணன் என்று குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இவரை அம்மாவின் ஆன்மா சும்மா விடாது என்றும் சாபம் கொடுதிருக்கிறார் எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம். இவர்கள் கோஷ்டி மோதல் பல நாட்காளாக நடந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk mla and minister fight


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal